பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறீர்களா? என தவெகவில் இன்று இணைந்த நாஞ்சில் சம்பத் அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் கேட்டுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சம்பத், பாஜகவுடன் இணக்கமா என கேட்டதற்கு விஜய் இல்லை என்றார். விஜய் என்னைப் பார்த்து 'நான் உங்கள் ரசிகன்' என்றார். நான் மெய் சிலிர்த்துப் போனேன். நாடு முழுவதும் தவெகவுக்காக பிரச்சாரம் செய்ய விஜய் எனக்கு அனுமதி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.