இரவில் வெளிச்சத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவரா? எச்சரிக்கை!

4453பார்த்தது
இரவில் வெளிச்சத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவரா? எச்சரிக்கை!
இரவில் அறையில் விளக்குகளை எரியவிட்டு தூங்குவது இதய ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. தூங்கும்போது வெளிச்சம் இருப்பதால் உடலின் இயற்கை சுழற்சி பாதிக்கப்பட்டு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், இது தூக்கத்திற்கு தேவையான மெலடோனின் ஹார்மோன் சுரப்பை குறைத்து இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. எனவே, இரவில் அறையை முழுமையாக இருட்டாக வைத்து கொள்வது அவசியமாகும்.