மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன. 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் இன்று (ஜன.19) மின்தடை செய்யப்படவுள்ளது. இந்த மின்தடையானது காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை இருக்கும் என கூறப்படுகிறது.