
இந்திய கப்பல் 44 ஆயிரம் டன் எல்.பி.ஜியுடன் கடந்தது
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எல்பிஜி கப்பலான கிரீன் சான்வி, 44,000 டன் எல்பிஜியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்துள்ளது. இது ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்தியாவின் 9-வது கப்பலாகும். இருப்பினும், மேலும் 17 இந்திய கப்பல்கள் இப்பகுதியில் சிக்கியுள்ளன. இதனால் இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளின் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.































