அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய முருகன், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான கரடிகுளம் கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.