அரியலூரில் 22 உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
அரியலூர் மாவட்டத்தில் 22 உதவி காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எஸ்பி அலுவலகத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளராக தமிழரசு மற்றும் போதைப் பொருள் சிறப்பு தடுப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக ராஜவேல் உள்ளிட்டோர் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.