அரியலூரில் 36 இருசக்கர வாகனங்கள் ஏலம்

659பார்த்தது
அரியலூரில் 36 இருசக்கர வாகனங்கள் ஏலம்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமம் கோரப்படாத 36 இருசக்கர வாகனங்கள் இன்று (14.02.2026) அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி தலைமையில் பொது ஏலம் விடப்பட்டன.  இந்த ஏலத்தில், பொதுமக்கள் பங்கேற்று வாகனங்களை ஏலம் எடுத்தனர். இதன் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.2,12,872 (ஜிஎஸ்டி உட்பட) வருவாய் ஈட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி