அரியலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட அருண்பாண்டியன், முகமது யாசின், கார்த்திக், தினேஷ்குமார், பாஸ்கர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை நடத்திய விசாரணையில் இவர்கள் பிடிபட்டனர். இவர்கள் அரியலூர், கயர்லாபாத், கீழப்பழுவூர், செந்துறை பகுதிகளில் நடந்த 13 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 14.5 சவரன் நகைகள் மற்றும் ரூ. 64 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.