அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் அரியலூரில் 11 மிமீ, திருமானூரில் 2.8 மிமீ, ஜெயங்கொண்டத்தில் 8 மிமீ, செந்தறையில் 7 மிமீ, சுத்தமல்லி நீர்த்தேக்கத்தில் 14 மிமீ, குருவாடியில் 3 மிமீ, தா. பழூரில் 7 மிமீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 52.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.