அரியலூர்-பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் இன்று வார மற்றும் தினசரி சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மறு முத்திரையிடாத 48 எலக்ட்ரானிக் தராசுகள் உட்பட மொத்தம் 92 எடை அளவுகோல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எடை மோசடி செய்த தராசுகளுக்கு ரூ5000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என உதவி ஆணையர் மூர்த்தி தெரிவித்தார்.