அரியலூர் மாவட்டம் செந்துறையில் இன்று புதிய ஆவின் பாலக நிலையம் திறக்கப்பட்டது. தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இந்த புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். மேலும், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மதிப்பு கூட்டப்பட்ட ஆவின் பாலகப் பொருட்களை விற்பனைக்கு வழங்கினார்.