அரியலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, போலீசார் 20.05.2026 முதல் 21.05.2026 வரை 24 மணி நேரம் "இரும்புகரம்" என்ற பெயரில் தீவிர அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 12 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், திறந்தவெளியில் மது அருந்திய 19 வழக்குகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.