ஆதிதிராவிடர் நலத்துறை சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை

1பார்த்தது
ஆதிதிராவிடர் நலத்துறை சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து தலா ரூ. 1,00,000/- நிதி உதவியாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள், ஆதிதிராவிடர் நல ஆணையரகம் அல்லது tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் படைப்புகளை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 26.11.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி