அரியலூர் மாவட்ட கலை மன்றம் வாயிலாக, தமிழ்நாட்டின் கலை பண்பாடுகளை மேம்படுத்தவும், கலைஞர்களின் திறனை சிறப்பிக்கவும், 2025-2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுக்கு சிறந்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்னசாமி தெரிவித்துள்ளார். வயது மற்றும் கலை புலமைக்கு ஏற்ப ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதுகள், 2002-2003 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.