அரியலூரில் ஏஐடியுசி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில், பொதுத் துறை மற்றும் பொதுச் சேவைகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், மின் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் நவம்பர் 26ஆம் தேதி அரியலூர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.