இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் வருகிற 7-ம் தேதி அன்று ஒற்றுமை யாத்திரை எனும் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா இதை அறிவித்துள்ளார். வி. கைகாட்டில் தொடங்கும் இந்த பாதயாத்திரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நெல்லியாண்டவர் கல்லூரியில் நிறைவடையும்.