அரியலூர்: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

67பார்த்தது
அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ)திரு பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும். 

குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் பள்ளியில் கற்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி ஒன்றே உங்கள் எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்தும் என்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜசேகர் பள்ளி வயது குழந்தைகள் யாரும் எவ்வித வேலைக்கும் செல்லக்கூடாது, 

அவர்களை பணிக்கு அனுப்புவதும் பணியில் சேர்ப்பதும் சட்டப்படி குற்றம். அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்க கற்கும் பொருட்டு ஒன்பதாம் வகுப்பில் சேரும் குழந்தைகள் அனைவருக்கும் சொந்த செலவில் சீருடைகள் வழங்கி சிறப்பித்தார். பள்ளித் துணை ஆய்வாளர்கள் பழனிசாமி செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சின்னதுரை அனைவரையும் வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி