கீழப்பழுவூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு

1பார்த்தது
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வாளர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், கணக்கில் வராத பணம் ஏதேனும் உள்ளதா என போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இதுவரை, எந்தவிதமான கணக்கில் வராத பணமும் பிடிபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.