அரியலூர்: 48 மணி நேரத்தில் 20 ரவுடிகள் கைது

752பார்த்தது
அரியலூர்: 48 மணி நேரத்தில் 20 ரவுடிகள் கைது
அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக (மே 20,21) “இரும்புகரம்” என்ற பெயரில் தீவிர அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், திறந்தவெளியில் மது அருந்தியதற்காக 25 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 40 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத 8 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி