தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் (NMMS), அரியலூர் மாவட்டத்தில் இன்று 3,212 மாணவர்கள் 18 மையங்களில் தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.