அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 5,22,954 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,59,234 ஆண் வாக்காளர்கள், 2,63,692 பெண் வாக்காளர்கள் மற்றும் 26 இதர வாக்காளர்கள் உள்ளனர். அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 2,61,161 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 2,61,793 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 2854 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1459 பேரும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 1395 பேரும் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் பெ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.