செந்துறை புறவழிச் சாலையில் வாட்டர் சர்வீஸ் கடைக்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக எடுத்து சென்றுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் மற்றும் வாட்டர் சர்வீஸ் உரிமையாளர் இடையே கைகலப்பு ஏற்பட்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிந்து, தகராறில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளரை கைது செய்தனர்.