அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தலைமையாசிரியர் ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் ரோஸ் அனைவரையும் வரவேற்றார். NSS திட்ட அலுவலர் பஞ்சாபிகேசன் மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இறுதியாக, தலைமையாசிரியர் சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.