செந்துறை அருகே ஆசைமுத்து (26) என்பவர் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த 31.12.2025 அன்று, ஆசைமுத்து தனது கூட்டாளிகளுடன் திருச்சியில் ஒருவரை கடத்தி கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் காரில் சென்றபோது கீழப்பழுவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி ஆசைமுத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் ஆசைமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது.