தா.பழூர் கிழக்கு ஒன்றிய
திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தா.பழூர் ஒன்றிய
திமுக அலுவலகம் எதிரில் அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மக்கள் தொண்டர் கணேசன் (முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோரது முழு திருவுருவ வெண்கல சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், அலுவலகம் முன்பு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி, பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.