அரியலூர்: உதவி ஆய்வாளர் மாரடைப்பால் பலி

0பார்த்தது
அரியலூர்: உதவி ஆய்வாளர் மாரடைப்பால் பலி
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சனிக்கிழமை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் முருகன் (52) திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். கரடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காவல் துறையினர் அஞ்சலி செலுத்திய பின், 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி