அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடிநீர்த் நீர்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றித் தர கிராம மக்கள் கோரிக்கைவிடுத்தனர். மேலும் மாரியம்மன் கோவிலிலிருந்து மயான சாலை வரை உள்ள தெரு குண்டும் குழியுமாக உள்ளது, அதனை சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்து செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.