அரியலூர் மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில், இன்று (பிப். 12) அரசு கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜீ கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதில் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் முத்துவேல், துணை தலைவர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.