அரியலூர் மாவட்டம், உய்யங்கொண்டான் ஏரி அருகே உள்ள தைல மரத்தோப்பில், உடலில் ரத்தக்காயங்களுடன் ஹரிஹரன் (17) என்ற இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். விசாரணையில், திருமண விழாவில் கேட்டரிங் வேலைக்கு சென்றபோது சம்பள தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால், பிப்ரவரி 18 அன்று நான்கு சிறுவர்கள் அவனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. ஜெயங்கொண்டம் போலீசார் நான்கு சிறுவர்களையும் கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர்.