கல்லூர் பாலம் அருகே காரும், சரக்கு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு வாகனம் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.