அரியலூர்: மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

0பார்த்தது
அரியலூர்: மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.06.2026) வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார். அவர் சமையல் கூடம், உணவுப் பொருட்கள் இருப்பு, குடிநீர் வசதி, மாணவர் வருகை மற்றும் உணவு வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்களுடன் அமர்ந்து உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக இராவுத்தன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.