அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (25.05.2026) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 378 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.