அரியலூர்: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்

79பார்த்தது
அரியலூர்: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்
அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்திலிருந்து நேற்று முந்தினம் (ஜூலை 3) காலை அரசு பேருந்து ஒன்று அரியலூரை நோக்கிச் சென்றபோது, கல்லூரி மாணவர்களான ஜெய்ஹிந்த் (21), ராஜா (20) ஆகியோர் படிக்கட்டில் நின்றவாறு பயணித்துள்ளனர். இதனை பஸ் ஓட்டுநர் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த ஜெய்ஹிந்த் பேருந்து டிரைவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த், ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி