தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவி தொகையாக மாதந்தோறும் 4000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தினை 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரெத்தினசாமி தெரிவித்துள்ளார்.