அரியலூர்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி; ஆட்சியர் தகவல்

333பார்த்தது
அரியலூர்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி; ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்படி, அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாட்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி