காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்

1பார்த்தது
காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த அரியலூர் மாவட்ட ஆட்சியர்
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ. ஆ. ப. , இன்று நேரில் ஆய்வு செய்தார். சமையல்கூடம், உணவுப் பொருட்கள் இருப்பு, குடிநீர் வசதி மற்றும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் முறையை பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தி, உணவின் தரம் மற்றும் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வு, திட்டத்தின் செயல்பாட்டை உறுதி செய்வதாகவும், மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.

தொடர்புடைய செய்தி