அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது சாலையில் சாகசத்தை தவிர்க்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.