அரியலூர் மத்திய ஒன்றியத்தின் சார்பில் திமுக மகளிர் அணியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் உயர்கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.