10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது கிழிந்துவிட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை. இ-பெட்டகம் என்ற செயலி மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி OTP சரிபார்த்து உள்ளே சென்றால், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, கல்லூரி சான்றிதழ்கள் முதல் பிறப்பு, வருமானச் சான்றிதழ்கள் வரை அனைத்தையும் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.