அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பெரிய கருப்பை ஆலமரம் பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.