அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் இன்று முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டு, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 11 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.