உடையார்பாளையம்: தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும், எடை தராசையும் விற்பனை முனையத்தையும் இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.