அரியலூர்: CM விஜய்க்கு விவசாயிகளின் கடும் கண்டனம்

2பார்த்தது
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், முதலமைச்சரின் அறிவிப்பை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்டன கோஷங்களை எழுப்பினர். தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாக கடன் தள்ளுபடி செய்யாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பிச்சை போடுவது போன்றது என்றும், இந்த ஆட்சி விவசாயிகளுக்கு நன்மை செய்யவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி