அரியலூர் ஆட்சியரகம் அருகே வாகனங்களை தூய்மைப்படுத்தும் நிலையம் நடத்தி வரும் காந்திராஜன் (55) என்பவரின் நிலையத்துக்கு சக்திபிரியன் (28) தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை கழுவ விட்டார். வாகனம் சரியாக கழுவப்படவில்லை எனக்கூறி சக்திபிரியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது காந்திராஜனின் மகன் உமாசங்கரை சக்திபிரியன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் காயமடைந்த உமாசங்கரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற தந்தைக்கு மனவேதனையால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் சக்திபிரியனை கைது செய்தனர்.