திட்டக்குடி அருகே பெலாந்துறையைச் சேர்ந்த கருப்புசாமி (43) என்பவர், 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் கடந்த 10.1.2026 அன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை கருப்புசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் வழங்கினர்.