10வது, 12வது மார்க் ஷீட் அல்லது சாதி சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டாலோ அல்லது கிழிந்துவிட்டாலோ கவலைப்படத் தேவையில்லை. இ-பெட்டகம் என்ற செயலி மூலம், உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி OTP சரிபார்த்து, 2015க்குப் பிறகு வழங்கப்பட்ட பல்வேறு முக்கிய சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதி, தொலைந்துபோன அல்லது சேதமடைந்த சான்றிதழ்களை மீண்டும் பெறுவதை எளிதாக்குகிறது.