அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில தினங்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்று (பிப்.09) அதிகாலை முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளில் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றனர். இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.