அரியலூர் அண்ணாசிலை அருகே, தமிழ்நாடு தோட்டக் கலை அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக் கலை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், உழவர்களை பாதிக்கக்கூடிய களப்பணியாளர்கள் இணைப்பினை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.