அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணை குழுவிற்கு 50 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் http://ariyalur.dcourts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, சட்ட பணிகள் ஆபிசில் நேரடியாக டிசம்பர் 16ஆம் தேதிக்குள் வழங்கலாம் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சட்ட உதவி தேவைப்படுவோருக்கு உதவிகரமாக இருக்கும்.