அரியலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணிபுரியும் 18 முதல் 60 வயது வரையிலான உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இமாம்கள், ஆலிம்கள் மற்றும் அரபி ஆசிரியர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, ஜூன் 30க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.